Thursday, April 23, 2015

About Meat Eating -புலால் உண்ணாமை



புலால் உண்ணாமை

ஆதி காலத்தில் மனிதன் காட்டுவாசியாக காட்டில் வசித்தபோது, தன் உணவிற்காக விலங்குகளை வேட்டையாடி உயிர் வாழ்ந்தான்.

இன்று நாகரீக வளர்ச்சி பெற்று, ஹை டெக் மனிதனான பிறகும் விலங்குகளாக இருக்கலாமா ?

மனித குரங்கிலிருந்து மனிதனாக, மனிதனிலிருந்து,  மகானாக, மகானிலிருந்து தெய்வம் என்ற நிலைக்கு முன்னேறாமல், மீண்டும், விலங்கு நிலைக்கு பின்னடையலாமா?

நீங்கள் ஒரு செடியை ஆசையாய் வளர்க்கிறீர்கள். அதை பக்கத்து வீட்டு ஆடோ, மனிதனோ சேதப்படுத்தினால் உங்களுக்கு கோபம் வராதா ? இறைவன் படைத்த பிறிதொரு உயிரை பறிக்க நமக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? கடவுளின் கோபத்திற்கு ஆளாக மாட்டோமா ?

காட்டில் வசிக்கும் சிங்கமே கூட தனக்கு பசித்தால் மட்டுமே ஒரு இரையை துரத்தி, துரத்தி ( உழைத்து ) கொன்று உண்கின்றது.  இறந்து கிடக்கும் அல்லது நோயால் படுத்துக்கிடக்கும் ஓர் அப்பாவி உயிரை கொன்று தின்னாது.  மனிதன் வாயில்லா ஜீவன்களாகிய ஆடு, கோழிகளிடம் தன் வீரத்தை காட்டுகிறான்.  அப்படியாவது வயிறு வளர்க்கத்தான் வேண்டுமா ? அந்த சிங்கமானது தனது வயிறு நிறைந்து விட்டால், மீண்டும் பசிக்கும் வரை, குறைந்தது ஒரு வாரத்திற்கு, தேவையில்லாமல் பிறிதொரு உயிரை கொல்லாது. படுத்திருக்கும்போது அதன் மீது ஒரு மானோ,முயலோ ஏறி ஓடினால் கூட அது கண்டுகொள்ளாது.
 
விலங்குகள் இறந்து விட்டால் அதன் பெயர் சடலம் [ Carcass ] - பிணம்.  மனிதன் பிணந் தின்னியா ?  ஒரு உயிரை கொல்வது பாவமல்லவா ? செடி கொடிகளுக்கும் உயிர் உள்ளதே என கேட்கலாம். செடியில் ஒரு இலையோ, பூவையோ, காயையோ பறித்து விட்டால் மீண்டும் தழைக்கும். ஒரு ஆட்டின் தலையை வெட்டி விட்டால் ...........?

சடலத்தை புதைக்கும் இடம் சவக்குழி, சுடுகாடு ; உங்கள் வயிறு....!


உங்களுக்கு எப்போதாவது காயம் பட்டிருக்கிறதா ? வலித்திருகிறதா ? உங்களுக்கு வலி தெரியுமா ? உங்களுக்கு ஏற்பட்ட காயத்தின் வலியை விட உங்கள் குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டு, அவர்கள் வலியில் துடித்தபோது, உங்களுக்கு கண்ணில் நீர் கசிந்திருக்கும்.. ஒரு விலங்கின் கழுத்தை அறுக்கும் போது அதற்கு வலிக்காதா ? உங்களுக்கு மரண வலி தெரியுமா ?  மரண பயம் அறிவீர்களா ? மரண ஓலம் கேட்குமா? மரண கதறல், மரண அவஸ்தை, மரண துடிப்பு அறிவீர்களா ?

பக்கத்து வீட்டில் ஒரு துஷ்ட குழந்தை இருந்தால் அதனுடன் சேர்ந்து விளையாட உங்கள் குழந்தையை அனுமதிப்பீர்களா ?  சிறிது நேரம் சேர்ந்து விளையாடினாலே கெட்ட குணம் உங்கள் குழந்தைக்கும் வந்துவிடும் என அஞ்சும் நீங்கள், ஒரு விலங்கின் ரத்தத்தையும், சதையையும் உண்டால் விலங்கின் புத்தி வந்து விடாதா ? மனிதத்தன்மை மறைந்து விடாதா?

உங்கள் எச்சிலை உங்கள் கையில் துப்பி, அதை நீங்களே சுவைப்பீர்களா ? உங்கள் கையில் காயம் பட்டு ரத்தம் வழிந்தால், அதை டம்ளரில் பிடித்து குடிப்பீர்களா ? ஒரு விலங்கின் எச்சில், சளி, சிறுநீர், ரத்தம், மலம் கலந்த சதையை உண்ண அறுவெறுப்பாக இல்லையா?

மாமிசம் உண்பதால், உங்கள் வியர்வை, சிறு நீர் , மலம் மிக மோசமாக நாறும் என்பதை அறிவீகளா ? நீங்கள் பயன்படுத்திய டாய்லெட்டில் நீங்களே மறுமுறை நுழைய முடியாது, பிறகு விளம்பரத்தில் பார்க்கும் அனைத்தையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.  மாமிசம் தவிர்த்தால் எந்த செயற்கை சோப்போ, வாசனை திரவியங்களோ, உங்களுக்கோ, உங்கள் டாய்லெட்டுக்கோ தேவைப்படாது.

எலி செத்து கிடக்கும் ஒரு அறையில் என்னதான் சந்தனம் தெளித்தலும், பத்தி ஏற்றி வைத்தாலும் அறை மணக்காது.  மாறாக எலியை தூக்கி தூர வீசி விட்டால், அறை நாறாது. உங்கள் மாமிசம் நிறைந்த வயிறு, எலி செத்து கிடக்கும் ஒரு அறை ………..!.

காய்கறிகளோ, இலைகளோ, பழங்களோ ஓரிடத்தில் போட்டு வைத்தால், சில நாட்களில் வெயிலில் காய்ந்து விடும். ஒரு சிறு தவளையோ இறந்து கிடந்தால் அந்த பகுதியே நாற்றமடிக்கும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இன்றைய புவி வெப்பமயமாதலுக்கு, மாமிச நுகர்வு கலாச்சாரம் ஒரு முக்கிய காரணம் என்பதை அறிவீர்களா ? Virtual Water என்று type செய்து வலை தளத்தில் சென்று பாருங்கள், அறியலாம்.



இன்று சிறிய விஷயங்களுக்கெல்லாம் போராட்டம் என்பது சாதாரணமாகிவிட்டது.

தன் சொந்த காரணங்களுக்காக சாலை மறியல், பஸ் கண்ணாடி உடைப்பு, தீ வைத்து கொளுத்துதல். வயிற்றுக்குள்ளே சென்றுள்ள விலங்கின் வேலை இதுவெல்லாம்.
   
 மனம் திருந்தி மனிதர்களாக மாறுங்கள் !          
With regards,
V.Ramakrishnan